மதராஸி படத்தின் கதை இதுவா?

12 ஆவணி 2025 செவ்வாய் 16:17 | பார்வைகள் : 1119
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா ஆகியோரை வைத்து இயக்கிய ‘சிக்கந்தர்’ படம் படுதோல்வி படமாக அமைந்தது.
அதையடுத்து தற்போது மதராஸி படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தின் இறுதிகட்டக் காட்சிகள் கடந்த சில வாரங்களாக இலங்கையில் படமாக்கப்பட்டன. தற்போது அந்த படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. அதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது அந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதில் “தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு சிறப்பு குழுவுக்கும், இடையே நடக்கும் வலுவான மோதல்தான் கதைக்களம். இதற்கு இடையில் அழகிய காதல், பழிவாங்குதல் மற்றும் தியாகம் ஆகியவைக் கொண்ட வலுவானக் கதைக்களம்தான் மதராஸி’ எனத் தகவல் வெளியாகியுள்ளது.