பாரிசில் கோகெய்ன் வாங்கிய வழக்கில் INA தலைவர் கைது!

12 ஆவணி 2025 செவ்வாய் 15:57 | பார்வைகள் : 389
பிரான்ஸ் தேசிய ஒலி-ஒளி காட்சி நிறுவனமான INA (Institut national de l'audiovisuel) தலைவர் லாரன்ட் வலே, ஜூலை மாத இறுதியில் பரிசில், உள்ள தனது இல்லத்திற்குகொக்கெய்ன்கொண்டு சென்றதையடுத்து அடுத்து, காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக நீதித்துறை மற்றும் விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவம் ஜூலை 29 அன்று நடந்ததுள்ளது.
ஆரம்பத்தில், காவல்துறையின் குற்றத் தடுப்பு பிரிவு (BAC) 17 வயது இளைஞன் ஒருவனைப் பின்தொடர்ந்து, ஒரு குடியிருப்பு வளாகத்தின் உள்ளே சென்றனர்.. அந்த இளைஞன் வெளியே வரும் போது கைது செய்தபோது, அவரிடம் 600 யூரோ பணம் இருந்தது.
விசாரணையில், அவர் சென்றிருந்த "நண்பர்" உண்மையில் INA தலைவர் லாரன்ட் வலே (Laurent Vallet) என்பது தெரியவந்தது. வாலே, சம்பவத்தை ஒப்புக்கொண்டு, கொக்கெய்னை காவற்துறையினரிடம் ஒப்படைத்தார். இது அவரின் முதல் கைது என்பதால், அவர் மீது மருத்துவ சிகிச்சை உத்தரவு (injonction thérapeutique) வழங்கப்பட்டதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
லாரன்ட் வாலே 2015 முதல் INA-வின் தலைவராக உள்ளார். அதற்கு முன் அவர் கலாச்சார அமைச்சகத்திலும் நிதி அமைச்சகத்திலும் பணியாற்றியிருந்தார்.