Paristamil Navigation Paristamil advert login

வெப்ப அலை - இந்த வெப்பக்காற்று எப்போது முடிவடையும்?

வெப்ப அலை - இந்த வெப்பக்காற்று எப்போது முடிவடையும்?

12 ஆவணி 2025 செவ்வாய் 13:57 | பார்வைகள் : 881


பிரான்ஸ் ஓகஸ்ட் 8, வெள்ளிக்கிழமை முதல், 1947 முதல் இதுவரை ஏற்பட்ட 51வது புதிய வெப்பக்காற்றினை எதிர்கொண்டு வருகிறது. வானிலை நிபுணர்கள் கூறுவதுபடி, இந்த வெப்ப அலை (CANICULE) இன்னும் சில நாட்கள் நீடிக்கக்கூடும்.

 

வெப்பத்தால் மூச்சுத்திணறுவது எப்போது வரை?

கடந்த சில நாட்களாக, பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் 40°C-ஐத் தாண்டும் கடும் வெப்பநிலையைச் சந்தித்து வருகின்றன. வானிலை முன்னறிவிப்புகளின்படி, வெப்பநிலை குறைவது உடனடியாக சாத்தியமில்லை.

பிரான்சின் வானிலை ஆய்வாளர்களின் தகவல்படி, ஓகஸ்ட் 16–17 வார இறுதி வரை, வெப்பநிலை அசாதாரணமாக அதிகமாகவே இருக்கும். தென்மேற்கு பகுதிகளில் முதலில் தாக்கி பின்னர் தென்கிழக்குக்கு நகரும் இடியுடன் கூடிய மழைச் சுழற்சி வந்தாலும், வெப்ப அலை நிலை தொடரும்.

ஓகஸ்ட் 14, வியாழன் பிற்பகலில், இடியுடன் கூடிய மழை தென்கிழக்கு பிரதேசங்களில் கூடுதலாக காணப்படும். எனினும், இது பிரான்ஸ் முழுவதிலும் வெப்பத்தை குறைக்க போதுமானதாக இருக்காது. ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை, போர்தோவில் (Bordeaux) 40°C, மொன்ட்பெலியேவில் (Montpellier) 38°C, துலூசில் (Toulouse) 37°C, பூர்ஜ்சில் (Bourges) 35°C, ருவானில் (Rouen) 33°C ஆகிய வெப்பநிலைகள் பதிவாகும்.

 

குளிர்ச்சியை அனுபவிக்க இன்னும் காத்திருக்க வேண்டும்

வார இறுதியிலும் (ஓகஸ்ட் 16–17) வெப்பம் தொடரும் — பிரெஸ்தில் 33°C, ரென்னில் 34°C, பாரிசில் 31°C, நோந்தில் 34°C என, தெற்கு பகுதிகளில் அதிகப்படியான வெப்பநிலை நீடிக்கும். ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை, வெப்பம் சிறிது குறைந்தாலும், அதிகப்படியான சூரிய ஒளி காரணமாக பருவத்திற்கேற்ற நிலைக்கு திரும்ப இயலாது.

 

ஓகஸ்ட் 20-இல் மாற்றம்

ஓகஸ்ட் 20, புதன்கிழமை முதல், பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்வதால் வெப்பக்காற்று முடிவடையும் என நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த நாளில், சில தென்கிழக்கு பகுதிகளைத் தவிர, நாடு முழுவதும் 22°C முதல் 30°C நிலையாக இருக்கும் என தேசிய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்