பரிஸ் : வீடொன்றில் இருந்து நிர்வாணப்பெண்ணின் சடலம் மீட்பு!!
.jpg)
12 ஆவணி 2025 செவ்வாய் 13:19 | பார்வைகள் : 1551
பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஓகஸ்ட் 11, நேற்று திங்கட்கிழமை மாலை 5.40 மணி அளவில் Faubourg Saint-Denis பகுதியில் உள்ள வீடொன்றுக்கு காவல்துறையினர் சென்றனர். வீட்டின் சேமிப்பகம் ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளனர். 50 வயதுடைய குறித்த பெண்ணின் சடலம் முழு நிர்வாணமாக இருததாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் மீட்கப்பட்டது. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் தாக்கப்பட்டமைக்கான எந்த தடயங்களும் இல்லை எனவும், இருந்தபோதும் அது கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.