Paristamil Navigation Paristamil advert login

கூகுளில் எவற்றை தேடக் கூடாது? ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகள்!

கூகுளில் எவற்றை தேடக் கூடாது? ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகள்!

12 ஆவணி 2025 செவ்வாய் 12:05 | பார்வைகள் : 448


நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு தோன்றும் அன்றாட சின்ன சின்ன கேள்விகளுக்கு கூட கூகுள் தேடுதல் பொறியை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.

அப்படிப்பட்ட நிலையில், கூகுள் தேடுதல் பொறியில் எதையெல்லாம் தேட கூடாது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஏனென்றால், கூகுள் தேடல் கருவியில் தவறுதலான தேடல் உங்களை சிறையில் அடைக்கவும் வழிவகுக்கலாம்.

சில சாதாரண கேள்விகள் கூட, உங்களின் ஐபி முகவரியை(IP Address) கண்காணிக்க தூண்டலாம், அல்லது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

தேசிய பாதுகாப்பு முகமை, மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் அனைவரது தேடல்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது, அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? அல்லது பயங்கர ஆயுதங்கள் பற்றிய தேடல் உங்களை நேரடியாக அவர்களின் கண்காணிப்புக்குள் எடுத்து செல்லும்.

வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என்பது போன்ற கேள்விகள் சட்டவிரோதமாக கருதப்பட்டு சில சமயம் நீங்கள் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

ஹேக்கிங் கருவிகள் குறித்த தேடல் மற்றும் ஹேக்கிங் செய்வது எப்படி? என்ற தேடல் வார்த்தைகள் இணையதள செயல்பாட்டை பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சைபர் கிரைம் பிரிவினரின் கவனத்தை ஈர்த்து உங்களை அவர்களின் கண்காணிப்புக்குள் எடுத்து செல்லும்.

ஹேக்கிங் செய்வது சட்டப்படி குற்றமாகும், எனவே அத்தகைய செயல்முறைகளில் நீங்கள் ஈடுபட்டால் கைது செய்யப்பட்டு அதிகாரிகளால் விசாரணைக்கும் உட்படுத்தப்படலாம்.

பலர் ஆன்லைன் அங்கீகரிக்கப்படாத இணைய தளங்களில் இருந்து இலவசமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்க்கின்றனர், இது இந்திய பதிப்புரிமைச் சட்டத்திற்கு எதிரானதாகவும், எனவே இவற்றின் கீழ் நீங்கள் பிடிப்பட்டால், அபராதங்கள் மற்றும் சிறைத் தண்டனை எதிர்கொள்ளலாம்.

உலக அளவில் குழந்தைகள் குறித்த ஆபாச படங்களை தேடுவது என்பது மிகப்பெரிய சட்டவிரோதமாகும்.

இந்தியாவில் இதற்கென POCSO( பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்) என்ற தனிச்சட்டம் மூலம் தீவிர தண்டனைகள் விதிக்கப்படலாம்.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்