Paristamil Navigation Paristamil advert login

உக்கிரமடையும் வெப்பம்! - 16 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

உக்கிரமடையும் வெப்பம்! - 16 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

12 ஆவணி 2025 செவ்வாய் 04:22 | பார்வைகள் : 401


கடந்த வார இறுதி முதல் பிரான்சை வாட்டி எடுக்கும் வெப்பம், இன்று செவ்வாய்க்கிழமை உக்கிரமடைந்துள்ளது. மொத்தமாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை வெப்பம் கிட்டத்தட்ட 42°C இனை கடந்திருந்தது. இன்று இன்னும் அதிகமாக 43°C வரை செல்ல வாய்ப்புள்ளது என Météo-France அலுவலகம் தெரிவிக்கிறது.

அத்தோடு, மத்திய பிரான்சின் இருந்து கிழக்கு, தெற்கு மேற்கு வரை செம்மஞ்சள் எச்சரிக்கையும், தலைநகர் பரிஸ் - இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கையில் உள்ள 16 மாவட்டங்கள்!

Charente-Maritime, Charente, Gironde, Dordogne, Lot-et-Garonne, Lot, Landes, Gers, Haute-Garonne, Aude, Tarn, Tarn-et-Garonne, Rhône, Isère, Drôme மற்றும் Ardèche.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்