Paristamil Navigation Paristamil advert login

கொலைக் குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த இரண்டு பிரெஞ்சு நாட்டவர்கள் ஸ்பெயினில் கைது!!

கொலைக் குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த இரண்டு பிரெஞ்சு நாட்டவர்கள் ஸ்பெயினில் கைது!!

11 ஆவணி 2025 திங்கள் 22:27 | பார்வைகள் : 1032


கொலை, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்ட இரண்டு பிரஞ்சுப் பிரஜைகள் ஸ்பெயின் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ஸ்பெயினில் உள்ள பெனிடார்மில் (Benidorm) அவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் மீது கொலை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஐரோப்பிய கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

அவர்களில் ஒருவர் மூன்று கைதுவாரண்டுகளுக்கு உட்பட்டிருந்தார். அவர் ஒரு குற்றவாளிக் குழுவின் கணக்குப் பொறுப்பாளராக இருந்து, போதைமருந்து விற்பனையை நிர்வகித்துள்ளார். 

2024-ஆம் ஆண்டு, அவரது கூட்டாளி கடத்தப்பட்டதற்குப் பதிலளிக்க அவர் Montereau-Fault-Yonne என்ற இடத்தில் ஒரு பாரில் துப்பாக்கிச்சூட்டை ஏற்பாடு செய்திருந்தவர். அந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் தீவிரமாகக் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்