கடும் வெப்பத்தைக் கடப்பதற்கான சரியான வழிமுறைகள் என்ன?

11 ஆவணி 2025 திங்கள் 12:13 | பார்வைகள் : 425
வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, சுகாதார அமைச்சகம் “இலகுவான மற்றும் சமநிலையான உணவுமுறை” பின்பற்ற பரிந்துரைக்கிறது. அதில் தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள், பச்சைக்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். மது பானங்களையும் மிகக் குளிர்ந்த பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
அடிக்கடி நீர் அருந்திக் கொள்ளல் அவசியம்.
வெளி வெப்பநிலை வீட்டின் உள் வெப்பத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் போது, பகலில் ஜன்னல்களை மூடி வைப்பதும், இரவில் வீட்டை காற்றோட்டம் செய்வதும் பரிந்துரைக்கப்படுகிறது.
விளையாட்டு மற்றும் உடற்பயிறசி நடவடிக்கைகள் முற்றிலும் தவிர்க்க வேண்டியது அல்ல. ஆனால் அவற்றை காற்றோட்டமான இடங்களில், மேலும் சூரியன் உச்சத்தில் இல்லாத அதிகாலை அல்லது இரவு நேரங்களில் செய்வது சிறந்தது.
அதிக வெப்பம் இருக்கும் நேரங்களில் நேரடி சூரியஒளி வெளிப்பாட்டினால், மயக்கம் அல்லது உடல் சோர்வு ஏற்படும் அபாயம். நீரிழப்பு ஆபத்தும் ஏற்படும்

13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1