Paristamil Navigation Paristamil advert login

கடும் வெப்ப அலை - சுகாதார அமைச்சர் தேசிய ஒற்றுமைக்கான அழைப்பு!

கடும் வெப்ப அலை - சுகாதார அமைச்சர் தேசிய ஒற்றுமைக்கான அழைப்பு!

11 ஆவணி 2025 திங்கள் 11:13 | பார்வைகள் : 793


தற்போது பிரான்சை தாக்கி வரும் வெப்பஅலை இன்று திங்கட்கிழமை (ஓகஸ்ட் 11) மேலும் கடுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய வானிலை மையம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், 12 மாவட்டங்கள் இன்று சிவப்பு எச்சரிக்கை நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தென்-மேற்கு பிரான்சில் உச்சஅளவிலான வெப்பநிலை ஏற்படும் என்றும், கார்கசோன் (Carcassonne) மற்றும் ஓங்கூலேமில் (Angoulême) அதிகபட்சம் 43°C வரை பதிவாகும்.

பல மாவட்டங்களில், குறிப்பாக தென்-மேற்கு பகுதிகளில், 40°C-க்கு மேற்பட்ட வெப்பநிலை ஏற்படும் என முன்னறிவித்துள்ள நிலையில், சுகாதார அமைச்சர் யானிக் நொய்தெர் (Yannick Neuder)  'தேசிய ஒற்றுமை'க்கான (solidarité nationale) அழைப்பு விடுத்துள்ளார்.

'இந்தக் கடும் வெப்ப அலைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சிகிச்சை நிலையங்கள் நெரிசல் அடையாமல் இருக்க, சுகாதார அமைச்சகம் வழங்கிய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

'இது ஒரு தேசிய ஒற்றுமை விவகாரம்' என்றும், 2003 ஆம் ஆண்டு பிரான்சில் ஏற்பட்ட வெப்ப அலை சம்பவத்தையும் அவர் நினைவுபடுத்தினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்