Paristamil Navigation Paristamil advert login

தொலைந்த செல்போன்களை கண்டுபிடிக்கும் செயலி - இதுவரை 5 லட்சம் போன்கள் மீட்பு

தொலைந்த செல்போன்களை கண்டுபிடிக்கும் செயலி - இதுவரை 5 லட்சம் போன்கள் மீட்பு

11 ஆவணி 2025 திங்கள் 11:42 | பார்வைகள் : 425


மத்திய அரசின் செயலி மூலம், தொலைந்து போன 5 லட்சம் செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செல்போன் இல்லாத மனிதர்களை காண்பது அரிது. மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் தொடங்கி, பணப்பரிவர்த்தனை வரை செல்போன் மனிதர்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக உள்ளது.

 

ஆனால் எதிர்பாராத விதமாக செல்போன் தொலைந்து போகவோ அல்லது திருடப்படவோ வாய்ப்புள்ளது.

 

 

அப்படியான நேரங்களில், பலரும் செல்போன் தொலைந்து விட்டால் அதை கண்டுபிடிக்க முடியாது என நினைத்து அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

 

ஆனால், மத்திய அரசின் செயலி ஒன்றின் மூலம், இதுவரை 5 லட்சம் தொலைந்து போன செல்போன்கள் கண்டறியப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை அமைச்சகம், சஞ்​சார் சாத்தி(sanchar saathi) என்ற இணையதளம் மற்றும் செயலியை அறிமுகம் செய்தது.

 

உங்கள் செல்போன் தொலைந்து விட்டால், இந்த இணையதளம் அல்லது செயலியில், இது குறித்து புகார் அளித்தால், அந்த செல்போனை வேறு யாரும் பயன்படுத்த முடியாத வகையில் செயலிழக்க செய்ய முடியும்.

 

அதன் பின்னர், செல்போனை ட்ரேஸ் செய்து கண்டறிந்த பின்னர், மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

 

இதில், உங்கள் செல்போன் எண், IMEI எண், தொலைந்த நேரம், இடம், உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்க வேண்டும்.

 

மேலும், உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டு இணைப்பு உள்ளது என்பதையும் கண்டறிய முடியும். நீங்கள் அங்கீகரிக்காத சிம் கார்டு உங்கள் பெயரில் வாங்க பட்டிருந்தால், அது குறித்து புகார் அளித்து செயலிழக்க செய்ய முடியும்.

 

மோசடியாளர்கள் பெரும்பாலும், போலியான ஆவணங்களை உருவாக்கி அடுத்தவர்களின் பெயரில் சிம் கார்டு வாங்கி அதன் மூலம் குற்றச்செயலில் ஈடுபடுகின்றனர்.

 

மேலும், மோசடி செய்யும் நோக்கில் வரும் சந்தேகத்திற்கிடமான செல்போன் அழைப்புகள் மற்றும் SMS , வாட்சப் அழைப்பு குறுஞ்செய்தி குறித்தும் புகார் அளிக்கலாம்.

 

இதன் மூலம், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான அங்கீகரிக்கப்படாத மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சந்தேகமான 29 லட்சம் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்