Paristamil Navigation Paristamil advert login

டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்- டாப் 10யில் இலங்கை வீரர்கள்

டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்- டாப் 10யில் இலங்கை வீரர்கள்

11 ஆவணி 2025 திங்கள் 11:42 | பார்வைகள் : 417


டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அதிக ஓட்டங்கள் எடுத்த டாப் 10 வீரர்கள் குறித்து இங்கே காண்போம்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 537 ஓட்டங்கள் குவித்தார்.

 

இதன்மூலம் டெஸ்டில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி, அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

 

சச்சின் டெண்டுல்கர்

 

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) 200 டெஸ்ட்களில் 15,921 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். அவரது ஸ்கோரில் 51 சதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 248* ஆகும்.

 

ஜோ ரூட்

இங்கிலாந்தின் ஜோ ரூட் (Joe Root) 158 டெஸ்ட்களில் 39 சதங்களுடன் 13,543 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 262 ஆகும்.

 

ரிக்கி பாண்டிங்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) 168 டெஸ்ட்களில் 13,378 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 41 சதங்கள் அடங்கும். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 257 ஆகும்.

 

ஜேக் கல்லிஸ்

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜேக்கியூஸ் கல்லிஸ் (Jacques Kallis) 166 டெஸ்ட்களில், 45 சதங்களுடன் 13,289 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 224 ஆகும்.

 

ராகுல் டிராவிட்

இந்திய அணியின் ராகுல் டிராவிட் (Rahul Dravid) 164 டெஸ்ட்களில் 13,288 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 36 சதங்கள் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 270 ஆகும்.

 

அலஸ்டைர் குக்

இங்கிலாந்தின் முன்னாள் வீரர் அலஸ்டைர் குக் (Alastair Cook) 161 டெஸ்ட்களில் 12,472 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவரது ஸ்கோரில் 33 சதங்கள் அடங்கும். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 294 ஆகும்.

 

குமார் சங்ககாரா

இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா (Kumar Sangakkara) 134 டெஸ்ட்களில் 38 சதங்களுடன் 12,400 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 319 ஓட்டங்கள் ஆகும்.

 

பிரையன் லாரா

மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா (Brian Lara) 131 டெஸ்ட்களில் 34 சதங்களுடன் 11,953 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 400* ஆகும்.

 

ஷிவ்நரைன் சந்தர்பால்

மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரரான ஷிவ்நரைன் சந்தர்பால் (Shivnarine Chanderpaul) 164 டெஸ்ட்களில் 11,867 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 30 சதங்கள் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 203* ஆகும்.

 

மஹேல ஜெயவர்த்தனே

இலங்கை ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே (Mahela Jayawardene) 149 டெஸ்ட்களில் 34 சதங்களுடன் 11,814 ஓட்டங்கள் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 374 ஆகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்