Paristamil Navigation Paristamil advert login

‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைகிறதா ?

‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைகிறதா ?

11 ஆவணி 2025 திங்கள் 10:17 | பார்வைகள் : 677


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து மாஸ் மசாலா படங்களை இயக்கும் ஒரு இயக்குனராக உருவாகியுள்ளார் சிவா. அவர் இயக்கும் படங்கள் எல்லாம் மிகவும் சுமாரான கதை மற்றும் அரதப் பழசான மசாலாத்தன உருவாக்கம் என இருந்தாலும் அவருக்குத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் வாய்ப்பளிக்கின்றனர்.

இதுவரை தமிழ் சினிமாவில் அவர் இயக்கியதெல்லாம் கார்த்தி, அஜித், ரஜினி மற்றும் சூர்யா போன்ற உச்ச நடிகர்களைதான். சமீபத்தில் அவர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா திரைப்படம் கேலிகளையும், மோசமான விமர்சனங்களையும் பெற்றது. இதனால் அவரது அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.

இந்நிலையில் இப்போது அவர் ரஜினியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் நிறுவனத்தின் மூலமாக  ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சிறுத்தை சிவா மற்றும் ரஜினிகாந்த் இணைந்த அண்ணாத்த திரைப்படம் ஒரு தோல்விப் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்