தேர்தல் கமிஷன் மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

11 ஆவணி 2025 திங்கள் 08:13 | பார்வைகள் : 141
தேர்தல் கமிஷனை பாஜ தனது மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது' என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
தேர்தல் கமிஷன் முறைகேடு செய்ததாக, காங்கிரஸ் எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் குற்றம் சாட்டி வருகிறார். தற்போது ராகுலுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
தேர்தல் கமிஷனை பாஜ தனது மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் ஆணையைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி. எனது சகோதரரும் லோக்சபா தலைவருமான ராகுல் வழங்கிய ஓட்டு திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப் படுத்துகின்றன.
ராகுல் இண்டி கூட்டணி எம்பிக்களை ஒருங்கிணைத்து, பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து தேர்தல் கமிஷனுக்கு பேரணியாக அழைத்துச் செல்லுமாறு நாங்கள் கோருகிறோம்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அரசியல் ரீதியாக வாக்காளர் பட்டியலில் நடக்கும் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நமது ஜனநாயகத்தின் இந்த நாசவேலை குறித்து ஒரு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும். திமுக இந்தப் போராட்டத்தில் தோளோடு தோள் நிற்கிறது. பாஜக இந்தியாவின் ஜனநாயகத்தை பகலில் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்க்க மாட்டோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1