Paristamil Navigation Paristamil advert login

புதிய சட்டம்: வேலை தவிர்ப்பை ராஜினாமா என கருதலாமா?

புதிய சட்டம்: வேலை தவிர்ப்பை ராஜினாமா என கருதலாமா?

10 ஆவணி 2025 ஞாயிறு 21:52 | பார்வைகள் : 1864


2023ல் இருந்து, பணியிடத்தை விட்டு வெளியேறும் ஊழியர், ராஜினாமா செய்தவராகவே கருதப்படுகிறார் என்பதே சட்டம். இதனால், வேலை இழப்புத் தொகை (chômage) பெற முடியாது. இதற்கு முன், பணிக்கு வராமல் இருந்தால், தவறுக்காக பணி நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் புதிய சட்டத்தில், ஊழியர் 15 நாட்களுக்குள் அவரது இல்லாமையை விளக்கவில்லை என்றால், தானாகவே ராஜினாமை செய்தவராக எண்ணப்படுகிறார். இந்த சட்டம் தொழிற்சங்கங்களால் விமர்சிக்கப்படுகிறது.

ஒரு வழக்கில், பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு தலைவி, புதிய இடத்துக்கு மாற்றப்பட்டதைக் "பணியாளர் கடன்" (prêt de main-d’œuvre) எனக் கூறி மறுத்துள்ளார். 

இது ஒப்பந்த மாற்றம் என்பதால், அவரது ஒப்புதல் தேவைப்பட்டது. அவர் புதிய பணிக்கு செல்லவில்லை. நிறுவனம் அவரை ராஜினாமா செய்தவர் என அறிவித்துள்ளது. ஆனால் லியோன் prud'hommes நீதிமன்றம், அவர் சட்டப்படி நியாயமான காரணத்தால் மறுத்ததாகக் கூறி, இந்த நடத்தை "உண்மை காரணமின்றி பணி நீக்கம்" (Licenciement sans cause réelle et sérieuse) எனத் தீர்ப்பளித்துள்ளது.

குறிப்பாக அவர் இதை நிறுவனத்திடம் தெரிவித்திருந்ததால். அவர் ராஜினாமா செய்ததாகக் கருதி இந்த நடைமுறையைப் பயன்படுத்த முடியாது. எனவே இந்த வழக்கில், ஒப்பந்தத்தை முடித்து உண்மையான மற்றும் தீவிரமான காரணமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாக அந்த தலைவிக்கு சார்பாக தீர்ப்பளிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்