Paristamil Navigation Paristamil advert login

Nanterre : பெண் மீது கத்திக்குத்து தாக்குதல்.. கணவர் கைது!!

Nanterre : பெண் மீது கத்திக்குத்து தாக்குதல்.. கணவர் கைது!!

10 ஆவணி 2025 ஞாயிறு 20:25 | பார்வைகள் : 526


 

மனைவியை கத்தியால் குத்திய கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Nanterre (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் நேற்று ஓகஸ்ட் 9, சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வாக்குவாதம் ஒன்றே கத்திக்குத்தில் சென்று முடிந்ததாகவும், பேப்பர் வெட்டும் ப்ளேட் கத்தி ஒன்றின் மூலம் மனைவியின் கழுத்தை வெட்டியுள்ளார் எனவும், அதிஷ்ட்டவசமாக உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய கணவர் அருகில் உள்ள André-Malraux பூங்காவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரது மனைவி 50 வயதுடையவர் எனவும் அவர் Franco-British மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்