2025-ல் பெரும்பாலான இளைஞர்கள் இந்த 4 App மூலம்தான் காதலிக்கத் தொடங்குகிறார்களாம்... ஏன் தெரியுமா?

10 ஆவணி 2025 ஞாயிறு 17:41 | பார்வைகள் : 124
தங்களுக்கு பிடித்த பொருத்தமான காதலரைக் கண்டறிய வேண்டுமென்பது அனைவரின் இருக்கும். ஆனால் அவர்களை கண்டறியும் வழிகள் கடந்த நூற்றாண்டுகளில் பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் சமூக மாற்றங்கள் மக்கள் இணைக்கும் பல்வேறு வழிகளை உருவாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டில், வாழ்க்கைத் துணையைச் சந்திப்பது என்பது தற்செயலான சந்திப்புகளாகவோ அல்லது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஏற்படும் அறிமுகமாகவோ இருக்கப்போவதில்லை.
அதற்கு பதிலாக, டிஜிட்டல் தளங்கள், சமூக வட்டங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் தற்செயலான சந்திப்புகள் கூட நவீன காதலில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்த பதிவில் நவீன யோகத்தில் காதலர்கள் எவ்வாறு சந்திக்கிறார்கள், மக்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை எங்கு சந்திக்கிறார்கள் என்பது குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தங்கள் காதலர்களைச் சந்திக்கும் விதம் வெகுவாக மாறிவிட்டது. சமீபத்திய ஆய்வுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் தம்பதிகள் சந்திக்கும் பொதுவான வழிகள் என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
- ஆன்லைன் டேட்டிங் - 50%+
- நண்பர்கள் மூலம் - 15%
- வேலை செய்யும் இடத்தில் - 10%
- கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் - 7%
- ஒரு சமூக நிகழ்வு அல்லது விருந்தில் - 5%
- குடும்பத்தினர் மூலம் - 4%
- மத அல்லது சமூகக் கூட்டங்களில் - 3%
- பொது இடங்கள் (பார்கள், ஜிம்கள் போன்ற இடங்களில்) - 3%
- பொழுதுபோக்குகள் மற்றும் ஒரே மாதிரியான ஆர்வங்கள் - 2%
- மற்றவை (Blind Dates, Speed Dating, Travel, பயணம் போன்றவை) - 1%
இந்தப் புள்ளிவிவரங்கள் தற்போதைய காதல் உறவுகளில் ஆன்லைன் டேட்டிங்கின் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன, ஆனால் வாழ்க்கைத் துணையைச் சந்திக்கும் பாரம்பரிய முறைகள் நீண்டகால திருமண உறவுகளை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றன.
கடந்த இருபது ஆண்டுகளில் ஆன்லைன் டேட்டிங் வேகமாக பிரபலமடைந்து வருகிறது, 2025 ஆம் ஆண்டில் தம்பதிகள் சந்திக்கும் மிகவும் பொதுவான வழியாக இது மாறியுள்ளது. Tinder, Bumble, Hinge மற்றும் Match.com போன்ற ஆப்கள் பொருத்தமான துணையைக் கண்டுபிடிப்பதை முன்னெப்போதையும் விட எளிதாக மாற்றியுள்ளது.
வசதி: சிங்கிளாக இருப்பவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே மற்றவர்களுடன் இணையலாம்.
பரந்த அளவிலான வாய்ப்புகள்:
மக்கள் தங்களுக்கு பொருத்தமானவர்களை உலகில் எந்த நாட்டில் வேண்டுமென்றாலும் தேடலாம். Algorithm அடிப்படையிலான பொருத்தம்: பல App -கள் ஆளுமை மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் மக்களைப் பொருத்த AI-யைப் பயன்படுத்துகின்றன.
Flexibility: பயனர்கள் தங்கள் விரும்பியபடி ஸ்வைப் செய்து யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதைத் தேர்வுசெய்யலாம். The Knot நடத்திய 2025 கணக்கெடுப்பின்படி, நிச்சயதார்த்தம் நடந்துள்ள தம்பதிகளில் 50% க்கும் அதிகமானோர் டேட்டிங் App மூலம் சந்தித்தனர், இது 2017 இல் 39% ஆக இருந்தது. டேட்டிங் தளங்கள் தொடர்ந்து புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து வருவதால், தங்கள் ஆத்ம துணையை ஆன்லைனில் சந்திப்பது இப்போது மிகவும் எளிதானதாக மாறியுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1