ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்?

10 ஆவணி 2025 ஞாயிறு 12:39 | பார்வைகள் : 132
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதுவரை அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
2025-2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கி நடந்து வருகிறது. டெஸ்ட் விளையாடி வரும் அணிகளின் புள்ளிகள் இதில் கணக்கில் கொள்ளப்படும்.
அந்த வகையில் இதுவரை முடிந்துள்ள போட்டிகளின்படி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் இந்திய வீரர் முதலிடத்தில் உள்ளார்.
கடைசி டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி, தொடரை சமன் செய்ய காரணமாக அமைந்த முகமது சிராஜ் (Mohammed Siraj) 5 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்
முகமது சிராஜ் (இந்தியா) - 23 விக்கெட்டுகள் (5 டெஸ்ட்கள்)
ஷாமர் ஜோசப் (மேற்கிந்திய தீவுகள்) - 22 விக்கெட்டுகள் (3 டெஸ்ட்கள்)
ஜோஷ் டங் (இங்கிலாந்து) - 19 விக்கெட்டுகள் (3 டெஸ்ட்கள்)
பென் ஸ்டோக்ஸ் - 17 விக்கெட்டுகள் (4 டெஸ்ட்கள்)
மிட்செல் ஸ்டார்க் - 15 விக்கெட்டுகள் (3 டெஸ்ட்கள்)
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1