ஈஃபிள் கோபுரத்தில் வெற்றுக்கைகளலால் ஏறிய மூவர் கைது!!

10 ஆவணி 2025 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 1616
300 மீற்றர் உயரம் கொண்ட ஈஃபிள் கோபுரத்தில் வெற்றுக்கைகளால் ஏறிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் பரசூட் மூலம் கோபுரத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.
ஓகஸ்ட் 9, சனிக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 5.30 மணி அளவில் மூவர் கொண்ட குழு ஒன்று பரசூட் பைகளை அணிந்தபடி, வெற்றுக்கைகளால் ஈஃபிள் கோபுரத்தில் ஏறியுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மூவரில் ஒருவர் பரசூட்டினை பயன்படுத்தி கோபுரத்தில் இருந்து குதித்துள்ளார். அவரும் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, கடந்த ஜூலை 10 ஆம் திகதி இதேபோன்று கோபுரத்தில் ஏறிய இருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.