யுக்ரேன்-அமெரிக்கா பேச்சுவார்த்தை! - அவசரமாக செலன்ஸ்கியை அழைத்த மக்ரோன்!!

10 ஆவணி 2025 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 2764
யுக்ரேன்-அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையே முக்கிய சந்திப்பு ஒன்று வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெற உள்ளது. யுக்ரேனின் போர்நிறுத்தத்தைக் கொண்டுவரும் நோக்கோடு இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. இந்நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் யுக்ரேனிய ஜனாதிபதி செலன்ஸ்கியை தொலைபேசியூடாக அழைத்து உரையாடினார்.
"யுக்ரேனின் எதிர்காலம் யுக்ரேனியர்கள் இல்லாமல் தீர்மானிக்க முடியாது" என மக்ரோன் செலன்ஸ்கியிடம் வலியுறுத்தினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "யுக்ரேனில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களும் அவசியம் தீர்வின் ஒரு பகுதியாக இருப்பார்கள், ஏனெனில் ஐரோப்பாவின் பாதுகாப்பும் அதில் உள்ளது." என குறிப்பிட்டார்.
இந்த உரையாடலின் போது பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமரும், ஜேர்மனியின் சான்சிலர் Friedrich Merz உம் உடன் இருந்தனர். உரையாடல் ஓகஸ்ட் 9, நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றிருந்தது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1