'லெனின் பாண்டியன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன்

9 ஆவணி 2025 சனி 16:32 | பார்வைகள் : 176
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் நடிகர்களாக அறிமுகமாகி வெற்றி நடை போட்டு வருகிறார்கள். சிலர் காமெடியன்களாகவும், சிலர் குணச்சித்திர நடிகர்களாகவும், சிலர் கதாநாயகர்களாகவும் அவரவருக்கு ஒரு தனி பாதையை போட்டுக் கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்தவர் இயக்குனர் கஸ்தூரிராஜா. செல்வராகவன், தனுஷ் ஆகியோர் இயக்குனர்களாக இருந்தாலும் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைத்ததில்லை. ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த 'படை தலைவன்' படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமான அவருக்கு வயது 73.
அவரைப் போலவே 70 வயதைக் கடந்த பிறகு நடிகராக அறிமுகமாக இருக்கிறார் கங்கை அமரன். அவருக்கு வயது 77. கங்கை அமரனை இயக்குனர் என்று மட்டும் குறிப்பிட முடியாது. இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முகத் திறமை கொண்டவர். இதற்கு முன்பு சில படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்துவிட்டுப் போய் இருக்கிறார்.
ஆனால், முதல் முறையாக முழு படத்திலும் நடிகராகவே வரப் போகிறார். அந்தப் படம் 'லெனின் பாண்டியன்'. சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மகன் தர்ஷன் கணேசன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் கங்கை அமரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகராக அறிமுகமாகும் அப்பா கங்கை அமரனுக்கு அவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, “நடிகராக அப்பா அறிமுகமாவது மகிழ்ச்சி. குழுவுக்கு வாழ்த்துகள்,” என பதிவிட்டுள்ளார்.
கங்கை அமரனின் இரு மகன்களாக வெங்கட்பிரபு, பிரேம்ஜி இருவருமே இதற்கு முன்பு சில பல படங்களில் நடித்திருக்கிறார்கள். வெங்கட் பிரபு வெற்றிகரமான இயக்குனராகவும் இருக்கிறார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1