Paristamil Navigation Paristamil advert login

2 பில்லியன் ஆப்பிள் சாதனங்களுக்கு பாதிப்பு - பயனர்களுக்கு இந்திய அரசு தீவிர எச்சரிக்கை

2 பில்லியன் ஆப்பிள் சாதனங்களுக்கு பாதிப்பு - பயனர்களுக்கு இந்திய அரசு தீவிர எச்சரிக்கை

9 ஆவணி 2025 சனி 16:38 | பார்வைகள் : 130


ஆப்பிள் சாதனங்களில் உள்ள தீவிர பாதுகாப்பு குறைபாடு குறித்து இந்திய அரசு நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், மேக், ஆப்பிள் கடிகாரங்கள் போன்ற சாதனங்களை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆப்பிள் சாதனங்களை பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், 2 பில்லியன் ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In), பல்வேறு ஆப்பிள் சாதனங்களில் உள்ள தீவிர பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

18.6 iOS பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில் உள்ள ஐபோன்

17.7.9/18.6 iPADOS பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில் உள்ள ஐபேட்

Sequoia 15.6, Sonoma 14.7.7அல்லது Ventura 13.7.7 ஆகிய macOS பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில் உள்ள மேக்

11.6 பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில் உள்ள கைக்கடிகாரம்

18.6/2.6 பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில் உள்ள ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் விஷன்

இந்த முந்தைய பதிப்பு உள்ள ஆப்பிள் சாதனங்களில் எளிதில் ஊடுருவி, முக்கிய தரவுகளை திருடவோ அல்லது மாற்றவோ முடியும்.

அங்கீகரிக்கப்படாத அணுகலை பெற முடியும். DOS தாக்குதல் நடத்த முடியம். முக்கிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தவிர்க்க முடியும்.

இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்தும் அனைத்து தனிநபர் மற்றும் நிறுவனங்கள் உடனடியாக சமீபத்திய மென்பொருள் பதிப்பை மேம்படுத்துமாறு CERT-In அறிவுறுத்தியுள்ளது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்