ரொனால்டோவின் தீவிர ரசிகர்களான இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா?

9 ஆவணி 2025 சனி 16:38 | பார்வைகள் : 113
பிரபல கால்பந்து ஜாம்பவானாக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர்களாக இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து இங்கே காண்போம்.
போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
அவரது விளையாடும் திறன், அர்ப்பணிப்பு, மன உறுதி உள்ளிட்ட விடயங்களால் பொதுமக்கள் மட்டுமின்றி, பிரபலங்கள் பலரும் அவருக்கு ரசிகர்களாகவே உள்ளனர்.
ரொனால்டோவை தொடர்ந்து பாராட்டி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli).
இதற்கு உதாரணமாக, 2022 உலகக்கிண்ண தொடரில் இருந்து போர்த்துக்கல் வெளியேறியபோது, ரொனால்டோ 'எல்லா காலத்திலும் சிறந்தவர்' என்று கோஹ்லி குறிப்பிட்டார்.
அத்துடன் அவர் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் நபராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
முகமது சிராஜ்
இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றியில் முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் (Mohammed Siraj), கடைசி நாளை தொடங்கும் முன் ரொனால்டோவின் புகைப்படத்தைப் பார்த்து உந்துதல் பெற்றதாக தெரிவித்தார்.
மேலும், தனது செல்போன் Wallpaperயில் "believe" என்ற வார்த்தையுடன் கூடிய ரொனால்டோவின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளார். அதுவே நம்பிக்கையுடன் களமிறங்கி விளையாட தன்னை உற்சாகப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
யுவராஜ் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரொனால்டோவின் ரசிகர் ஆவார்.
ரொனால்டோவுக்கு அடிக்கடி ஆதரவு அளித்து ட்வீட் செய்து வரும் யுவராஜ் சிங், 2022 ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கு முன்பாக, தனக்குப் பிடித்த அணி போர்த்துக்கல் என்று தெரிவித்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர் டென்னிஸில் தனக்கு பிடித்த வீரர் ரோஜர் பெடரர் என்று கூறியிருக்கிறார். அதேபோல் கிரிக்கெட்டில் ஏபி டி வில்லியர்ஸ் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதே சமயம் கால்பந்தில் மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியரோரில் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு உடனடியாக அவர் "ரொனால்டோ" என்று பதிலளிக்க, அவரும் தீவிர ரசிகர் என்று தெரிய வந்தது.
தேவ்தத் படிக்கல்
ஷ்ரேயாஸ் ஐயரைப் போலவே தேவ்தத் படிக்கலும் தனக்கு பிடித்த கால்பந்து வீரராக ரொனால்டோவையே தெரிவு செய்தார்.
அவர் ஜாம்பவான்கள் இருவரில் ஒருவரை தெரிவு செய்யுமாறு கேட்டபோது உடனே இந்த பதிலை தந்தார்.
மேலும், இவரும் யுவராஜ் சிங்கை போலவே மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தீவிர ரசிகர் ஆவார்.
ஹர்திக் பாண்ட்யா
ரொனால்டோவைப் பற்றி சமூக ஊடகங்களில் பதிவிடும் ஹர்திக் பாண்ட்யா, அவரது பெயர் மற்றும் எண் பொறிக்கப்பட்ட பொருட்களை அணிந்திருக்கிறார்.
சில சமயங்களில் ஹர்திக்கின் ஆக்ரோஷமான, துடிப்பான விளையாட்டு பாணி பெரும்பாலும் ரொனால்டோவை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1