தனுஷ் உடன் காதலா ? உண்மையை சொன்ன மிருணாள் தாக்கூர்!

9 ஆவணி 2025 சனி 13:42 | பார்வைகள் : 227
திரையுலகில் வதந்திகள் என்பது சகஜம். முன்னணி நடிகர், நடிகைகளுக்கு இடையே காதல் இருப்பதாக அவ்வப்போது வதந்திகள் பரவுவதுண்டு. அவற்றில் சில மட்டும் உண்மையாகி, திருமணத்தில் முடியும். ஆனால், சில வதந்திகள் விளம்பரத்திற்காகவே பரப்பப்படுகின்றன. தற்போது தனுஷ் - மிருணாள் தாக்கூர் இடையே காதல் இருப்பதாக கடந்த சில தினங்களாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகளுக்கு வலுசேர்க்கும் விதமாக மிருணாள் தாக்கூர் பார்ட்டியில் தனுஷுடன் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் தனுஷின் காதல் பாடல்களுக்கு அவர் வைஃப் செய்யும் வீடியோக்கள் போன்றவை வெளியாகி வைரலாகி வந்தன.
தமிழ் நடிகரான தனுஷ் தற்போது பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோவாக வலம் வருகிறார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில், சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் தனுஷ், தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில், தான் இவருக்கும் இவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து கிடைத்தது.
இந்நிலையில், தனுஷ் நடிகையுடன் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவி வந்தன. 'சீதா ராமம்' பட புகழ், நடிகை மிருணாள் தாக்கூருடன் தனுஷ் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட் ஊடகங்களில் வதந்திகள் பரவின. மிருணாள் நடித்த 'சன் ஆஃப் சர்தார் 2' பட விழாவிற்கு தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனால், 'இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறாரா?', 'இவர்களுக்குள் ஏதாவது உறவு இருக்கிறதா?' என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. மேலும், மிருணாள் தாக்கூரின் பிறந்தநாள் விழாவிலும் தனுஷ் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு, தனுஷ் அடிக்கடி மிருணாளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், டேட்டிங் வதந்திகள் பரவத் தொடங்கின.
இந்த வதந்திகள் பரவலாக பரவி வருவதால், மிருணாள் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார். 'தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. சமீபத்தில் எங்கள் இருவருக்கும் இடையேயான வதந்திகள் பரவியது எனக்குத் தெரியும். அதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தன. 'சன் ஆஃப் சர்தார் 2' நிகழ்வில் தனுஷ் கலந்து கொண்டது குறித்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவருக்கும் அஜய் தேவ்கனுக்கும் நல்ல நட்பு. அஜய் தேவ்கன் தான் தனுஷை அந்த நிகழ்விற்கு அழைத்தார். அந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக எங்களை இப்படி இணைத்துப் பேசுகிறார்கள்' என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார். மிருணாலின் விளக்கத்தால், இவர்களுக்குள் காதல் இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னராவது, சமூக ஊடகங்களில் இவர்கள் குறித்த விமர்சனங்கள் ஓயுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1