Paristamil Navigation Paristamil advert login

மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறையால் சிக்கலில் நீதிமன்றங்கள்

மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறையால் சிக்கலில் நீதிமன்றங்கள்

9 ஆவணி 2025 சனி 12:07 | பார்வைகள் : 602


மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் விசாரணைகள் ஒத்திவைக்கப்படுகின்றன, நீதிமன்றக் கூட்டங்கள் மந்தமாகின்றன, செலவுத் திட்டம் வெடித்து உயரும் நிலைமை

பிரான்ஸ் நீதித்துறை, மொழிபெயர்ப்பு தேவையில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வை சந்தித்து வருகிறது.

பிரான்ஸ் நீதிமன்றங்கள், சட்ட நடைமுறைகளில் இடம்பெறும் நூற்றுக்கணக்கான மொழிகளை கையாள முக்கியமான மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

இன்றைய நிலவரப்படி, பிரான்சில் நடைபெறும் ஒவ்வொரு ஐந்து வழக்குகளில் ஒன்றில் குறைந்தது ஒரு தரப்பினர் பிரெஞ்சு மொழியை கையாள முடியவில்லை.

"நீதியான விசாரணையை உறுதிப்படுத்துவதற்கு மொழிபெயர்ப்பாளர்களின் தேவைகள் மிக அதிகம்," என முன்னாள் நீதிபதி அலன் லெரூ ( Alain Leroux) விளக்குகிறார். "யாரிடமாவது கேள்வி கேட்கும்போது, அவர் நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்வது அவசியம்."

"செலவுத்திட்டம் மிகப் பெரியது," என அலன் லெரூ நினைவூட்டுகிறார்.

2024 ஆம் ஆண்டு, இந்த துறையில் சுமார் 86 மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டுள்ளன — எட்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட 73% இது அதிகம்.

இருந்தாலும், சிக்கல் நீங்கவில்லை,நிபுணர்களைத் தேடுவது இன்னும் கடினமாகவே உள்ளது. அதிகாரப்பூர்வ பட்டியலில் 8,500 மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தாலும், அனைவரும் முழுநேரப் பணியில் இல்லை; சிலர் தொடர்புக்கு எப்போதும் கிடைப்பதில்லை.

"மொழிபெயர்ப்பாளர்கள் உடனடியாக கிடைக்கவில்லை என்றால், அவர் நீதிமன்றத்தில் பங்கேற்கும் வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டிய நிலை வரும்," என அவர் கூறுகிறார்.

இதனால் பல விசாரணைகள் தாமதமடைகின்றன அல்லது சட்டத்தின் எல்லைகளைத் தொட்டுவிடும் நகைப்புக்குரிய சூழ்நிலைகள் உருவாகின்றன — உதாரணமாக, Google மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துவது போன்றவை.

நீதிபதிகளின் பணியை எளிதாக்குவதற்காக, நீதித்துறை அமைச்சகம் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை பரிசீலித்து வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்