Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சிகரெட் பற்றவைத்த நபர் - மன்னிப்பு கோரினார்!

சிகரெட் பற்றவைத்த நபர் - மன்னிப்பு கோரினார்!

9 ஆவணி 2025 சனி 07:05 | பார்வைகள் : 8320


 

flamme du Soldat inconnu சுடரில் சிகரெட் பற்றவைத்த நபர் நேற்று ஓகஸ்ட் 8,  வெள்ளிக்கிழமை பிரெஞ்சு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

குறித்த நபருக்கு ஒருவருட சிறையும், €15,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை அவஎ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவருக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. "பிரெஞ்சு மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளேன். அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்!" என நீதிமன்றத்தில் அவர் குறிப்பிட்டார்.

குறித்த நபர் முன்னர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் Place de l'Étoile பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்பவியலாளராக பணிபுரிகிறவர் எனவும், விளையாட்டாக அவர் இக்காரியத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்