Paristamil Navigation Paristamil advert login

இந்தியா யாருக்கும் அடிபணியாது; வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

இந்தியா யாருக்கும் அடிபணியாது; வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்

9 ஆவணி 2025 சனி 12:00 | பார்வைகள் : 144


இந்தியா யாருக்கும் அடிபணியாது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்காக வரியும், அபராத வரியும் விதித்து வருகிறார். இதனால் சர்வதேச அளவில் தொழில், வர்த்தக துறையினர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

இந்தியா யாருக்கும் அடிபணியாது. கோவிட்-19 நெருக்கடியை நாடு ஒரு வாய்ப்பாக மாற்றி ஐடி துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும்.

ஏற்றுமதி

உலகெங்கிலும் உள்ள நாடுகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தக கூட்டாளிகளைத் தேடுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும். இன்று இந்தியா வலுவானது, அதிக மரியாதைக்குரியது. நாடு புதிய வர்த்தக ஏற்பாடுகளை தொடர்ந்து உருவாக்கும்.

வர்த்தக ஒப்பந்தங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சிலி, பெரு, நியூசிலாந்து மற்றும் இன்னும் பல நாடுகள் உட்பட பலதரப்பட்ட கூட்டாளிகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடர்கிறது. மேலும் வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகிறது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்