Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பெண்ணைக் காப்பாற்ற ஆற்றில் பாய்ந்த நபர் - பரிதாபமாக பலி!!

பரிஸ் : பெண்ணைக் காப்பாற்ற ஆற்றில் பாய்ந்த நபர் - பரிதாபமாக பலி!!

9 ஆவணி 2025 சனி 06:00 | பார்வைகள் : 2873


ஆற்றில் குதித்த பெண் ஒருவரை காப்பாற்றும் நோக்கோடு, canal Saint-Denis ஆற்றில் குதித்த நபர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

ஓகஸ்ட் 8, நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் Quai du Lot பகுதியில் இருந்து காலை 11 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். பெண் ஒருவர் வேண்டுமென்றே ஆற்றில் குதித்துள்ளதாகவும், அவரைக் காப்பாற்ற நோக்கோடு ஆற்றில் பாய்ந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், அவரைக் காப்பாற்ற முற்பட்ட நபரும் போதைப்பொருள் அடிமையானவர் எனவும், அவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் மூச்சுத்திணறி உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணை காவல்துறையினர் ஆற்றில் இருந்து மீட்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்