Fnac Darty குழுமத்திற்கு €3.9 மில்லியன் அபராதம்!!
8 ஆவணி 2025 வெள்ளி 22:51 | பார்வைகள் : 9389
பினாக் டார்டி (Fnac Darty) குழுமம், தனது விநியோகர்களுக்கான கட்டணங்களைத் தாமதமாக செலுத்தியதற்காக, 3.9 மில்லியன் யூரோக்கள் DGCCRF எனப்படும் மோசடி தடுப்பு நிர்வாகம் விதித்துள்ளது.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Fnac Darty குழுமம், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவே தாமதங்கள் ஏற்பட்டன என்றும், அதனை முழுமையாக பரிசீலிக்கவில்லை என குற்றம்சாட்டி, இந்த முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்த அபராதத் தொகையின் அளவு குறித்தும் குழுமம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த காலங்களில், நீதி மன்றங்கள் கொரோனா கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்ட அபராதங்களை குறைத்துள்ள உதாரணங்களையும் குழுமம் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு இடையிலான கட்டணத் தாமதம் என்பது பிரான்சில் ஒரு முதன்மை பிரச்சனையாக உள்ளது. 2024ல், இந்த தாமதம் ஐரோப்பிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.
பிரான்ஸ் மத்திய வங்கி, இந்த தாமதங்கள் இல்லையென்றால், சிறுய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (PME) 15 பில்லியன் யூரோ கூடுதல் பண ஓட்டம் கிடைத்திருக்கும் என கூறியுள்ளது. இதனை எதிர்க்க, பிரதமர் ஃப்ரான்சுவா பயிரூ, நிறுவனங்கள் தாமதமாக கட்டணம் செலுத்தும் பட்சத்தில், மொத்த வருமானத்தின் 1% வரை அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan