Paristamil Navigation Paristamil advert login

Savigny-le-Templeஇல் போதைப்பொருள் வியாபாரி கைது: 375 கிராம் கொகைன் பறிமுதல்!!

Savigny-le-Templeஇல் போதைப்பொருள் வியாபாரி கைது: 375 கிராம் கொகைன் பறிமுதல்!!

8 ஆவணி 2025 வெள்ளி 20:01 | பார்வைகள் : 1408


Savigny-le-Temple பகுதியில், 34 வயதான ஒரு தொழிலாளி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவருடைய வீட்டில் நடந்த சோதனையில், 375 கிராம் 63.9% தூய்மையான கொகைன், கையால் தயாரிக்கப்பட்ட ஒரு கொகைன் அச்சு, 830 யூரோ பணம், மூன்று மொபைல் போன்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

காவல்துறையின் நாய் துல்லியமாக அவை வைத்திருந்த வீட்டை காட்டி கொடுத்துள்ளது, மற்றும் சந்தேகநபர் ஜன்னல் வழியாக தப்ப முயற்சி செய்தபோதும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர், போதைப்பொருள் வைத்திருப்பதை மட்டும் ஒப்புக்கொண்டேள்ளார். வாங்குதல், மற்றும் விற்பனை குற்றச்சாட்டுகள் மீது அவர் மவுனம் காத்துள்ளார். 

அவர் Melun நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, உடனடியாக விசாரணை நடைபெற வேண்டியிருந்துள்ளது. ஆனால், காவல் துறையினருக்கு மேலதிக விசாரணை தேவைப்பட்டதால், நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்