மக்ரோனை "சவப்பெட்டி தயார் செய்யச்சொன்ன" ரபாய் யூடியூப் வீடியோவில் கொலை மிரட்டல்!!
8 ஆவணி 2025 வெள்ளி 18:14 | பார்வைகள் : 9315
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை கொலை மிரட்டல் விடுத்ததாக, பிரஞ்சு பேசும் ரபாய் (வழிபாட்டிற்கு தலைமை தாங்கும் ஒரு யூத சமூகத்தின் மதத் தலைவர்) டேவிட் டேனியல் கோஹென் (David Daniel Cohen) மீது நீதிமன்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை "Archives 260" என்ற YouTube வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், அவர் மக்ரோனை "அவர் தனது சவப்பெட்டியைத் தயாரிப்பதில் முழு ஆர்வமும் கொண்டுள்ளார்" எனக் கூறியுள்ளார்.
ரபாய் மக்ரோனை, யூதர்களுக்கு எதிராக இருந்த ரோம பேரரசர் Titusஉடன் ஒப்பிட்டு, பாலஸ்தீனத்தின் அங்கீகாரம் கடவுளுக்கு எதிரான போராகும் எனக் கூறியுள்ளார். Titus யெருசலேமில் இரண்டாவது ஆலயத்தை கிறிஸ்துவுக்கு பிறகு 70ஆம் ஆண்டு அழித்தவராகும். உள்துறை அமைச்சகம் இவற்றை Pharos (சட்டவிரோத இணைய உள்ளடக்கத்தை அதிகாரப்பூர்வமாக புகாரளித்தல்),ஊடாக தகவல் வழங்கி, வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வீடியோவில், ரபாய் கோஹென் பாலஸ்தீனர்களை "தங்கியோர்" எனவும், அவர்கள் நிலத்தை விட்டு வெளியேறவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அவர் பிரெஞ்சு மக்களையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார், ஏனெனில் "கடவுளின் கோபம் வரப்போகிறது" எனவும் தெரிவித்துள்ளார். இவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, பிரான்ஸ் தலைமை ரபாய் ஹாயிம் கொர்ஸியாவை கடுமையாக கண்டித்து, அவர் பிரான்ஸ் ரபாய் அமைப்புடன் எதுவும் தொடர்பில்லை எனவும் விளக்கியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan