சிம்பு - வெற்றிமாறன் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்?

8 ஆவணி 2025 வெள்ளி 17:26 | பார்வைகள் : 159
நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருந்த திரைப்படத்தை முதலில் கலைப்புலி தாணு தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சமீபத்தில் அவர் இந்தத் திட்டத்திலிருந்து விலகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இந்தப் படத்தை மற்றொரு தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் "மற்றவர்களின் அலறலைத் தாண்டி தொடரும் சிங்கத்தின் ஆட்டம் விரைவில்" எனப் பதிவிட்டுள்ளார். இது சிம்புவின் புதிய படத்தைக் குறிப்பதாகத் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஏற்கனவே, சிம்புவின் மிகப்பெரிய வெற்றிப் படமான 'மாநாடு' திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்தவர். எனவே, மீண்டும் சிம்புவின் படத்தைத் தயாரிக்க அவர் முன்வந்திருப்பதாகவும், இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025