தீயினால் 5.000 வீடுகளில் மின்தடை!!

8 ஆவணி 2025 வெள்ளி 11:22 | பார்வைகள் : 975
காட்டுத் தீயினால் AUDE மாவட்டத்தில் 5.000 வீடுகளிற்குன மேல் மினசாரம் தடைப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை மாலை, யுரனந பகுதியில் இன்னும் 1,500 வீடுகள் மின்சாரமின்றி உள்ளன என்று எனெடிஸ் (ENEDIS) நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய முக்கிய முன்னுரிமை என்பது குடிநீர் வழங்கல் மற்றும் தொலைத்தொடர்பு வலைப்பின்னல்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியை உறுதிசெய்வதாகும் எனவும் எனெடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெருக்கடியின் உச்சத்தில் 5,000 வீடுகள் மின்சாரம் இன்றி இருந்தன என யுரனந மாவட்டஆணையம் தெரிவித்திருந்தது.
மாவட்டஆணையம், வரவிருக்கும் வார இறுதியில் நடைபெறவிருந்த அனைத்து பொது மற்றும் தனியார் நிகழ்வுகளையும் இரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது.
AUDE மாவட்ட ஆணையர்) கிரிஸ்டியன் புஜே (Christian Pouget) 'இன்றிரவு வெள்ளிக்கிழமை இரவு கூட 100% மின்சாரம் மீளடைக்க முடியாது.' எனத் தெரிவித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025