ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் வைத்துள்ள கோரிக்கை

8 ஆவணி 2025 வெள்ளி 09:15 | பார்வைகள் : 120
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அணித்தலைவராக செயல்பட்டு வருபவர் சஞ்சு சாம்சன்.
2024 ஐபிஎல் மெகா ஏலத்தில், ரூ.18 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அவரை தக்க வைத்தது.
2025 ஐபிஎல் தொடரில், காயம் காரணமாக 9 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், 286 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னர், அவரை டிரேடிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க உள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அளித்த பதிலில், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட எந்த ஒரு வீரரையும் டிரேடிங் மூலம் விடுவிக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்தது.
இந்த சூழலில், 2026 ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னர், தன்னை டிரேடிங் செய்யவோ அல்லது அணியில் இருந்து விடுவிக்கவோ ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சஞ்சு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க ஆர்வம் காட்டுவதாகவும், ஆனால் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வருவது அவரது வாய்ப்பை கடினமாக்கியுள்ளது.
தற்போது அணி நிர்வாகத்துடன் அவரது உறவு சுமூகமாக இல்லை எனவும், இதனால் அந்த அணியில் அவர் தொடர விரும்பவில்லை என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025