Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ட்ரம்ப் திட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ட்ரம்ப் திட்டம்

8 ஆவணி 2025 வெள்ளி 08:15 | பார்வைகள் : 218


அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ள புலம்பெயர்ந்தோரை நீக்கும் விதமாக, மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தகவல்களை சேகரிக்கும் முறையில் திருத்தம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், சட்டவிரோதமாக தங்கியுள்ள புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவதில் ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

அமெரிக்காவில், 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்களை வெளியேற்ற ஜனாதிபதி ட்ரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையில் மாற்றம் செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மற்றும் தகவல்களை பயன்படுத்தி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, நவீன கால உண்மைகள் மற்றும் புள்ளி விபரங்களின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும்.

இதன்படி அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் விலக்கப்படுவர்' என டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில், 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும். கடைசியாக, 2020ல் நடந்துள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்