போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தனிச்சிறை! - 79 கைதிகள் இடமாற்றம்!!

7 ஆவணி 2025 வியாழன் 20:22 | பார்வைகள் : 1617
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு என பா-து-கலே மாவட்டத்தில் தனிச்சிறை ஒன்று அமைக்கப்பட்டு அங்கு முக்கிய கைதிகள் கொண்டுசெல்லப்பட்டு வருகிறமை அறிந்ததே.
Vendin-le-Vieil நகரில் உள்ள குறித்த சிறைக்கு இதுவரை 79 கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். வெளி உலகுடன் தொடர்பில் இல்லாதவாறும், ஏனைய கைதிகளுடன் தொடர்பில் இல்லாதவாறும் கைதிகள் அங்கு சிறைவைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 22 ஆம் திகதி அங்கு முதன்முறையாக 17 கைதிகள் அடைக்கப்பட்டனர்.
அதன் பின்னர் 24 ஆம் திகதி, பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் முகமட் அம்ரா அங்கு சிறைவைக்கப்பட்டார்.
அதன் பின்னர் மேலும் பல கைதிகள் அடைக்கப்பட்டு, இதுவரை 79 முக்கிய கைதிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Gérald Darmanin இன்று தெரிவித்தார்,