Paristamil Navigation Paristamil advert login

கட்சியைப் பறிக்க சூழ்ச்சி செய்கிறார் அன்புமணி: ராமதாஸ் குற்றச்சாட்டு

கட்சியைப் பறிக்க சூழ்ச்சி செய்கிறார் அன்புமணி: ராமதாஸ் குற்றச்சாட்டு

8 ஆவணி 2025 வெள்ளி 09:04 | பார்வைகள் : 101


கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி எதுவும் செய்யவில்லை. கட்சியைப் பறிக்க சூழ்ச்சி செய்கிறார்'' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது:

ஐயா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்தவர் அன்புமணி; என் மீது உயிரையே வைத்திருந்தவர்களுக்கு, பணம் கொடுத்து எனக்கு எதிராகத் தூண்டிவிடுகிறார். என்னைச் சந்திக்க வந்ததாக அன்புமணி பொய் சொல்கிறார். அவர் தைலாபுரம் வரவும் இல்லை; நான் கதவை அடைக்கவும் இல்லை.

கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி எதுவும் செய்யவில்லை. கட்சியைப் பறிக்க சூழ்ச்சி செய்கிறார். அன்புமணி சார்பாக அதாவது சமாதானம் பேச வந்த கட்சி அதிமேதாவிகள் அனைவரும் இதேபோலவே பாடியதால் தான், கடைசி பேச்சுவார்த்தையின் போது தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

சின்னமும் போச்சு

அதன் பிறகு அன்புமணி அவருடைய அம்மாவை மட்டும் பார்த்துவிட்டு என்னிடம் எதுவுமே பேசாமல் சென்றுவிடுவார். நான் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்று கட்சிக்காரர்கள் மத்தியில் பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு கொண்டிருக்கிறார்.

பெரிதாக ஒன்றுமில்லை. நான் சொன்னது கட்சி அங்கீகாரம் இல்லாமல் இருக்கிறது.

சின்னம் இல்லாமல் இருக்கிறது. கட்சிக்கு தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் இல்லை. சின்னமும் போச்சு.

கட்சி அங்கீகாரம்

வரும் சட்டசபை தேர்தல் கட்சி கூட்டணி சம்பந்தமாகவும், வேட்பாளர் நியமனம் சம்பந்தமாகவும், கட்சி சின்னம் பெறுவது சம்பந்தமாகவும் கட்சி அங்கீகாரம் பெறுவது சம்பந்தமாகவும் வரும் சட்டசபை தேர்தலை நான் தலைமை ஏற்று வழிநடத்துகிறேன் என்று நிறுவனர் என்ற முறையில் முடிவெடுத்தேன். இதற்கு, 'அன்புமணி முடியாது. நீங்கள் முடிவெடுக்ககூடாது. நான் தான் முடிவெடுப்பேன். நான் தான் கூட்டணியை பேசுவேன்.

நான் தான் வேட்பாளரை முடிவு செய்வேன்' என்று பிடிவாதம் செய்வது தான் பிரச்னை. அதுமட்டுமல்ல, கட்சியில் உள்ள பொறுப்பாளர்களை மாற்றுவதும் அல்லது புதிதாக போடுவதும் தான் பிரச்னை. அந்த அதிகாரம் எனக்கு தான் இருக்க வேண்டும். நான் உருவாக்கிய கட்சியில் நான் முடிவெடுக்க கூடாது என்று என்னை நிர்பந்தம் செய்ய அன்புமணிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

டம்மியாக...!

அன்புமணியிடம் கட்சியை கொடுத்துவிட்டு, நிறுவனர் ஆகிய நான் டம்மியாக தைலாபுரம் தோட்டத்தில் கதவை சாத்திக்கொண்டு கொள்ளு பேரன்களுடன் விளையாட வேண்டும் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது முடியாது. என்னை உயிர் மேலாக மதிக்கின்ற பாட்டாளி சொந்தங்களை நான் தினமும் பார்க்காமல், அவர்களோடு தொலைபேசியில் பேசாமல் என்னால் இருக்க முடியாது. மக்கள் என்னை வெகுவாக நேசிக்கிறார்கள் என் மேல் உயிரையே வைத்திருக்கிறார்கள். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்