ராகுலின் கருத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது: தேர்தல் கமிஷன்

8 ஆவணி 2025 வெள்ளி 07:04 | பார்வைகள் : 101
வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் அதில் உறுதியாக இருந்தால், உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு கர்நாடக தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும் என தலைமைத் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
டில்லியில் நிருபர்களைச் சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டினார். மேலும், கர்நாடக வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் என மோசடி நடந்துள்ளது. பாஜவுடன் இணைந்து தேர்தல் கமிஷன் போலியான நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறது என தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ராகுல் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், அவர், 1960ம் ஆண்டு வாக்காளர்கள் பதிவு சட்டத்தின் விதிகள் 20(3)(b)ன் கீழ், உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து போட்டு, அதனை இன்று மாலைக்குள் கர்நாடகாவின் தலைமை வாக்காளர் பட்டியல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
2.ஒரு வேளை தனது குற்றச்சாட்டுகளில் ராகுலுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அபத்தமான முடிவுகளுக்கு வருவதையும், இந்திய குடிமக்களை தவறாக வழிநடத்துவதையும் நிறுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மேலும், ராகுல் அளிக்க வேண்டிய உறுதிமொழி பத்திரத்தையும் இணைத்துள்ளது
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025