Paristamil Navigation Paristamil advert login

8வது மாடியிலிருந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு!!

8வது மாடியிலிருந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு!!

7 ஆவணி 2025 வியாழன் 13:45 | பார்வைகள் : 434


சார்செல்லில் (Sarcelles), 5 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் விடுமுறையில் இருந்தபோது, கட்டடத்தின் 8வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவம் Vignes-Blanches பகுதியில் செவ்வாய்கிழமை மாலை நடந்துள்ளது. சிறுவன் பால்கனியை தாண்டி விழுந்ததாக தெரிகிறது. அவசர உதவி வந்தும், சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. விசாரணை தொடர்கிறது. 

சிறுவன் மாலியில் வசிக்கும் பெற்றோரின் மகன்; அவர் விடுமுறைக்காக பிரான்ஸில் தங்கி இருந்துள்ளார். இந்த விபத்து நகர வாசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக, நகராட்சி உளவியல் ஆலோசனை மையம் ஒன்றைத் திறந்துள்ளது. 

இதேபோன்று, Méry-sur-Oise பகுதியில் மற்றொரு 4 வயது சிறுவன் 4வது மாடியிலிருந்து விழுந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெயில் காலங்களில் ஜன்னல்கள் திறந்திருப்பதால், இவ்வகை விபத்துகள் அதிகரித்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்