அதிர்ச்சி! -மருத்துவமனையில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை!

7 ஆவணி 2025 வியாழன் 12:20 | பார்வைகள் : 554
சென்-சன்-துனிசிலுள்ள (Seine-Saint-Denis) மொந்ரொய் (MONTREUIL) இல் அமைந்துள்ள ஆந்திரே கிரெகுவார் (André Grégoire) மருத்துவமனையில், பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையுடன் தொடர்புடைய இருவரை நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் விடுவித்த தீர்ப்புக்கு எதிராக, பொபினி நீதிமன்றம் மேல் முறையீடு செய்துள்ளது.
குற்றச்சாட்டுகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான காணொளிகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டன.
இது தொடர்பாக 26 வயதான செவிலியர் மற்றும் அவரது 28 வயது காதலர் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
செவிலியர் கடந்த புதன்கிழமை இரவுClichy-sous-Bois காவல் நிலையத்தில் சரணடைந்தபோது தான் உட்பட தனது காதலரையும் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தியிருந்தார்.
இந்த இருவரும் காவல்துறை கண்காணிப்பில், ஆனால் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.
இந்த முடிவு தவறானது என நாட்டின் நீதித்துறை அமைச்சர் நேரடியாக விமர்சித்துள்ளார்.
'இது பிரெஞ்சுப் பொதுமக்களை ஆழமாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் சம்பவம். குழந்தைகளை நாம் பாதுகாக்கவேண்டும்.'
TikTok தளத்தில் வெளியான ஒரு வீடியோவில் '93ம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பிள்ளைகள் மீது வன்கொடுமை நடக்கின்றது' என எச்சரிக்கைகள் எழுந்தன.
அந்தக் காணொளியில் கறுப்பின குழந்தைகள் நோக்கி வெறுப்பு மற்றும் பாலியல் வன்முறை இழைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
'இது இனவாதத் தோற்றத்துடன் செய்யப்பட்டது என நிரூபணமில்லை. பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளில் ஒருவர் வெள்ளை மற்றவர் கறுப்பு.' என பொபினி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆந்த்ரே கிரெகுவார் மருத்துவமனை அதிகாரிகள், இந்நிகழ்வுக்கு எதிராக எதிர்காலத்தில் நடைபெறும் நீதிமன்ற வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பாக இருந்து நீதிமன்றத்திற்கு வருவொம் என அறிவித்துள்ளனர்.
இந்தக் கொடூர சம்பவம், பிரான்சில் குழந்தைகளின் பாதுகாப்பு, மருத்துவ பணியாளர்களின் ஒழுக்கம், சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகளின் தாக்கம் ஆகிய விவகாரங்களை மீண்டும் ஒன்று சேர்ந்து சுட்டிக்காட்டுகின்றன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025