சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுக்கு 75% வருகை கட்டாயம்

7 ஆவணி 2025 வியாழன் 12:55 | பார்வைகள் : 130
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 75 சதவீத வருகைப்பதிவு இருந்தால் மட்டும்தான், பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
மாணவர்களின் வருகைப்பதிவு விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், மொத்த பள்ளி வேலை நாட்களில், குறைந்தபட்சம் 75 சதவீதம் நாட்கள் வந்திருக்க வேண்டும். அதைவிட குறைவான வருகைப்பதிவு உள்ள மாணவர்களை, பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது.
இது குறித்த தகவலை, பள்ளி நிர்வாகங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். மாணவர்களின் வருகைப்பதிவு தொடர்ந்து குறையும்பட்சத்தில், பெற்றோரின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலுக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்கள், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு, உரிய ஆவணங்கள் அடிப்படையில், எழுத்துப்பூர்வ விண்ணப்பங்கள் பெற்று, சிறப்பு அனுமதியுடன் தேர்வெழுத அனுமதிக்கலாம்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025