IBAN எண்கள் உட்பட Bouygues டெலிகொம் வாடிக்கையாளின் தகவல்கள் களவாடப்பட்டுள்ளது!!

6 ஆவணி 2025 புதன் 22:41 | பார்வைகள் : 574
Bouygues டெலிகொம் நிறுவனம் ஒரு பெரிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 6.4 மில்லியன் வாடிக்கையாளர் கணக்குகளின் தகவல்கள் களவாடப்பட்டுள்ளன.
கசியப்பட்ட தகவல்கள்:
- தொடர்பு விவரங்கள் (Coordonnées)
- ஒப்பந்த விவரங்கள் (Données contractuelles)
- நபர் அடையாளத் தகவல்கள் (Données d’état civil)
- வணிகருக்கான தகவல்கள் (si vous êtes un professionnel)
- IBAN (இண்டர்நேஷனல் வங்கிக் கணக்கு எண்) என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வங்கி அட்டையிலுள்ள எண்கள் மற்றும் Bouygues டெலிகாம் கணக்குகளுக்கான கடவுச்சொற்கள் பாதுகாப்பாக உள்ளன.
இந்த சம்பவம் திங்கட்கிழமை கண்டறியப்பட்டதும், அதை Bouygues டெலிகொம் குழுவின் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பில் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டு, மறுமொழி மற்றும் தகவல் சுதந்திர ஆணையத்திற்கும் (CNIL) அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை மின்னஞ்சல் அல்லது SMS அனுப்பப்பட்டுள்ளது. மோசடி முயற்சிகளை தவிர்க்க, அந்நிய அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களிடம் விழிப்புடன் இருக்குமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025