Paristamil Navigation Paristamil advert login

Booking.com மீது சுமார் 10,000 ஐரோப்பிய ஹோட்டல் உரிமையாளர்கள் வழக்கு கொடுத்துள்ளனர்!!!

Booking.com மீது  சுமார் 10,000 ஐரோப்பிய ஹோட்டல் உரிமையாளர்கள் வழக்கு கொடுத்துள்ளனர்!!!

6 ஆவணி 2025 புதன் 18:11 | பார்வைகள் : 559


ஐரோப்பாவில் உள்ள சுமார் 10,000 தங்குமிட உரிமையாளர்கள், Booking.com தங்களது விலை நிர்ணய சுதந்திரத்தை கட்டுப்படுத்தியதற்காக, அம்ஸ்டர்டாமில் (Amsterdam) உள்ள நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடுத்துள்ளனர். 

தங்குமிட உரிமையாளர்கள் தங்களது சொந்த இணையதளங்களில் அல்லது பிற தளங்களில் குறைந்த விலைக்கு அறைகளை வழங்க Booking.com தடை விதிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த செயலால் தங்குமிட உரிமையாளர்கள் சதவீத கமிஷனாக அதிக தொகையை இழப்பதாகவும், இது நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஐரோப்பிய ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது.

Booking.com தற்போது ஆன்லைன் ஹோட்டல் முன்பதிவுகளில் 70% பங்கினை வைத்துள்ளது. இந்த சந்தை ஆதிக்கத்தின் மூலம், அவர்கள் கமிஷன் விகிதங்களை அதிகரித்து, ஹோட்டலர்களின் லாபத்தை குறைத்துவிட்டனர். 

ஒரு அறைக்கு வாடிக்கையாளர் €100 செலுத்தினால், ஹோட்டல் உரிமையாளர்கள் வெறும் €75 மட்டுமே பெறுகின்றனர். 2015ல் பிரான்சில் சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், மற்ற ஐரோப்பிய நாடுகளில் அவை தொடருகின்றன. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஹோட்டல் உரிமையாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்து வழக்கில் கலந்து கொள்ள வேண்டியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்