தொடரும் கிரிப்டோகரன்சி தாக்குதல்கள்! - பரிசில் ஐவர் கைது!

6 ஆவணி 2025 புதன் 18:01 | பார்வைகள் : 367
கிரிப்டோகரன்ஸி நிபுணர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளுவது பிரான்சில் தொடர்கதையாகியுள்ளது. நேற்று ஓகஸ்ட் 5, செவ்வாய்க்கிழமை பரிசில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள Peninsula விடுதியில் குறித்த ஐவரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கிரிப்டோகரன்ஸி நிபுணர்களை தாக்கி அவர்களிடம் இருந்து கிரிப்டோ குற்றிகளையும் (Bitcoin) , ஐபோன் தொலைபேசிகளையும், பணத்தையும் அவர்கள் கொள்ளையிட்டுள்ளனர். கிரிப்டோ குற்றிகள் €2 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தின் Avenue Kléber வீதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் இருந்து நேற்று மாலை 7.15 மணிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அவர்களது நிறுவனத்தில் பணிபுரியும் நிபுணர் ஒருவரை சில நபர்கள் கடத்தி வைத்துக்கொண்டு 400,000 யூரோக்கள் பணம் கேட்டி மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே குறித்த நிபுணரிடம் இரண்டு மில்லியன் பெறுமதியுடைய கிரிப்டோ குற்றிகள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் காவல்துறையினர் குறித்த நிபுணரையும் மீட்டு, ஐந்து கொள்ளையர்களையும் கைது செய்தனர். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025