தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்?

6 ஆவணி 2025 புதன் 18:23 | பார்வைகள் : 171
சென்னையில் நேற்று நடந்த பேய்கதை பட விழாவில் சிறப்பு விருந்தினராக சினிமா இசையமைப்பாளர் சங்க தலைவர் சபேஷ் கலந்து கொண்டார். காரணம், படத்துக்கு இசையமைப்பது அவர் சகோதரர் முரளி மகன் போபோ சசி. பிரபல இசையமைப்பாளர் தேவாவின் தம்பிகள் தான் சபேஷ்-முரளி.
அண்ணனுடன் சேர்ந்து இவர்கள் பல்வேறு படங்களுக்கு இணைந்து இசையமைத்துள்ளனர். தனியாக பொக்கிஷம், வைகை, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல படங்களுக்கும் இவர்கள் இசையமைத்துள்ளனர். நேற்றைய விழாவில் 400க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு இன்னமும் தேசியவிருது கிடைக்கலையே? உங்களுக்கு ஆதங்கம் இருக்கிறதா என கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதில் அளித்த சபேஷ், 'காதல் கோட்டை படத்துக்கே அவருக்கு தேசிய விருது கிடைத்து இருக்கணும். ஆனால், கிடைக்கவில்லை. அவரை பலரும் கானா பாடல்களை தந்தவர் என்ற ரீதியில் பார்க்கிறார்கள். அவர் மகன் ஸ்ரீகாந்த்தேவா கருவறை என்ற குறும்படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாங்கிவிட்டார். எங்கள் குடும்பத்துக்கு அது மகிழ்ச்சி '' என்றார்.
இந்த பேச்சு வைரலாகி வருகிறது. காதல் கோட்டை மட்டுமல்ல, ஆசை, குஷி, வாலி, அண்ணாமலை, பாட்ஷா, அவ்வை சண்முகி, நேருக்கு நேர், முகவரி என பல படங்கள் தேசிய விருதுக்கு தகுதியானவை. ஏனோ சில பாலிடிக்ஸ் காரணமாக அவருக்கு கிடைக்கவில்லை என்று அவர் தரப்பு சொல்கிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025