முருங்கைக்கீரை சட்னி

6 ஆவணி 2025 புதன் 18:23 | பார்வைகள் : 216
முருங்கைக்கிரையில் இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி என எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. எனவே அதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அந்தவகையில் முருங்கைக்கீரையில் சட்னி அரைத்து பாருங்கள். குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்கீரை - 2 கைப்பிடி அளவு
எண்ணெய் – 1 tbsp
தக்காளி – 1
வேர்க்கடலை - 2 tbsp
உளுந்து – 1 tbsp
காய்ந்த மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 4 பல்
சீரகம் – 1 tsp
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முருங்கைக்கீரையை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.கடாய் வைத்து, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை , உளுந்து, சீரகம் ஆகியவற்றை வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை தனியா ஆற விடுங்கள்.
மீண்டும் அந்த கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தக்காளி, பச்சை மிளகாய் , பூண்டு ஆகிவற்றை பச்சை வாடை போக வதக்கவும்.
பின் அதில் முருங்கைக் கீரையை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
இதற்கிடையில் தனியாக வறுத்த உளுந்து, காய்ந்த மிளகாய் கலவையை முதலில் அரைத்துக்கொள்ளுங்க.
பின் கீரையை அதே கலவையோடு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். சட்னியையும் ஒன்றும் பாதியுமாக அரைக்க வேண்டும்.
அரைக்கும்போதே தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக தாளிப்பு கொடுங்கள். அவ்வளவுதான் முருங்கைக்கீரை சட்னி தயார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025