The Hundred கிரிக்கெட் லீக் - மைதானத்தில் நரி புகுந்ததால் இடைநிறுத்தப்பட்ட போட்டி

6 ஆவணி 2025 புதன் 13:04 | பார்வைகள் : 848
The Hundred கிரிக்கெட் லீக்கின் தொடக்க போட்டியில் மைதானத்தில் நரி புகுந்ததால் போட்டி சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டது.
பிரித்தானியாவில் தி ஹண்ட்ரட்(The Hundred) கிரிக்கெட் லீக் தொடர் நேற்று தொடங்கியது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான லண்டன் ஸ்பிரிட் அணியும்(London Spirit), ஓவல் இன்வின்சிபிள்ஸ்(Oval Invincibles) அணிகளும் மோதியது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் துடுப்பாட்டம் ஆடிய லண்டன் ஸ்பிரிட் அணி, 94 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 80 ஓட்டங்கள் குவித்தது.
81 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஓவல் இன்வின்சிபிள்ஸ், 69 பந்துகளில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 81 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
20 பந்துகள் வீசி, 11 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்திய ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி வீரர் ரஷீத் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த போட்டியின் போது, லண்டன் ஸ்பிரிட் அணி வீரர் டேனியல் வொரால் பந்து வீசும் போது, நரி ஒன்று மைதானத்திற்குள் புகுந்ததால் போட்டி சில நிமிடம் இடைநிறுத்தப்பட்டது.
இதன் பிறகு, நரி மைதானத்தை விட்டு வெளியேறியதும் போட்டி மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.
இதே போல், இலங்கை மைதானத்தில் பாம்புகள் நுழைந்ததும், அவுஸ்திரேலியா மைதானத்தில் தேனீ கூட்டம் நுழைந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இலங்கை உடை