Paristamil Navigation Paristamil advert login

அவசர வதிவிடங்கள் பற்றிய கோரிக்கை: பாரிசில் இடமின்றி தவிக்கும் குடியேறறவாதிகள்;!

அவசர வதிவிடங்கள் பற்றிய கோரிக்கை: பாரிசில் இடமின்றி தவிக்கும் குடியேறறவாதிகள்;!

6 ஆவணி 2025 புதன் 14:05 | பார்வைகள் : 1041


பரிசின் மாநகரசபை முன்பாக 200-க்கும் மேற்பட்ட இடமின்றி தவிக்கும் குடியேற்றவாதிகள் பெரும்பாலானோர் குடும்பங்களோடு தங்கள் இரவை கழித்தனர். அவசர வதிவிடங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.

இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள், தனிமையில் உள்ள பெற்ற அம்மாக்கள் மற்றும் குடும்பத்தாருடன் வந்த தந்தையர், இடமின்றி மிகக் கடுமையான சூழ்நிலைகளில் வாழ்பவர்கள் ஆகியயோரே இங்கு தங்களிற்கான ஒரு உறைவிடத்திற்காகப் போராடுகின்றனர்.

அவர்களில் சிலர் சட்டப்பூர்வமாக பிரான்ஸில் தங்கியுள்ளவர்கள்.

குடியேற:றவாதிகள், பெரும்பாலும் தலைநகர் மற்றும் சமூக சேவைகள் மூலம் நிராகரிக்கப்படுகின்றனர். பலர் மாநகர சமூக தங்குமிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சிறுவர் உட்பட இவர்கள் கோடையில் மிக மோசமான நிலையில் தங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பலர் தரையில் இருக்கை, உறைச்சீலைகள், உறங்கும் பைகள் என தூங்கியுள்ளனர்

இருக்க இடம் வேண்டும்! ஒரு குழந்தையும் சாலையில் இருக்கக்கூடாது!' என்பதே அவர்களின் அடிப்படை முழக்கமாக உள்ளது.

Utopia 56 எனும் குடியேறிகள் பாதுகாப்பு அமைப்பே முனைந்து இவர்களுடனான போராட்த்திற்கு வலுச் சேர்த்துள்ளது.

அதன் பிரதிநிதி யான் மான்சி (Yan Manzi) 'இடமின்றி தவிக்கும் மக்கள் வசிக்க இடம் கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும்.' எனத் தெரிவித்தார்.

'குளிர்காலம், கோடைக்காலம் என எல்லா பருவங்களிலும் நாங்கள் இடமின்றி தவிக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களை திறக்கின்றோம்.' என மாநகபரசபையும்

'கோடை என்பதனால் வதிவிடங்கள் மூடப்படவில்லை.' என மாவட்ட ஆணையங்களும் தெரிவித்துள்ளன.

இவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தாலும்,

பொதுத்துறை செயல்பாடுகள் மந்தமடைவது

தன்னார்வலர்கள் விடுமுறையில் இருப்பது

பாடசாலைகள்; மற்றும் உடற்கல்வி கூடங்கள் மூடப்படுவது

— இவை அனைத்தும் தங்க இடமின்றி தவிக்கும் மக்களின் நிலையை மோசமாக்குகின்றன.

பரிசின் மையத்தில் அவசர வதிவிடங்கள் பற்றிய கவலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், 200 குடியேறிகள், பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள், மாநகர மாளிகை முன் இரவு முழுவதும் தங்கி, உடனடி நடவடிக்கை வேண்டுகின்றனர். அரசு மற்றும் மாநகராட்சி இடையே பொறுப்புநிலைப் பங்கீடு பற்றிய விவாதம் நிலவுகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்