Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கோகெயின் ரோஸ், B13, கத்… பிரான்ஸில் பரவும் புதிய போதை ஆபத்து!

கோகெயின் ரோஸ், B13, கத்… பிரான்ஸில் பரவும் புதிய போதை ஆபத்து!

6 ஆவணி 2025 புதன் 13:01 | பார்வைகள் : 2470


பிரான்ஸில் போதைமருந்து சந்தை தற்போதைய காலத்தில் வரலாறு காணாதளவுக்கு பரந்து விரிந்துள்ளதாகவும், புதிய வகை மருந்துகள் தொடர்ந்து நிலைபெற்றுள்ளனவெனவும் மயக்கமருந்து எதிர்ப்பு மையம் OFAST (Office anti-stupéfiants) அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ (Bruno Retailleau), "ஒரு வெள்ளை சுனாமி" எனக் கூறி, நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் ஒரு பேரிடியாக மாறிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தார். பாரம்பரியமாக பயன்பட்ட கோகெயின் மற்றும் மெதுவான போதையூட்டும் மருந்துகள் மட்டுமல்லாமல், தற்போது பல புதிய போதை மருந்துகளும் சந்தையில் பரவத் தொடங்கியுள்ளன.

 

1. கோகெயின் ரோஸ் (Cocaïne rose / Tussi / Tucibi)

இவ்வகை போதைப்பொருள் 2C-B எனப்படும் ஒரு செயற்கை மருந்தை அடிப்படையாகக் கொண்டது.

இது கேட்டமின் + MDMA + மெத்தாம்பெட்டமின் ஆகியவற்றின் கலவையாகும்.

பவுடர் வடிவில், வெளிர் இளஞ்சிவப்பு நிறத்துடன் காணப்படும்.

1 கிராம் விலை: €60 முதல் €100 வரை

2024ல் பிரான்ஸில் 5.4 கிலோகிராம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

2. B13 (DOU / நிடசீன் - Nitazène)

இது மிகவும் ஆபத்தான சிந்தை மருந்து (synthetic opioid) வகையைச் சேர்ந்தது.

முதலில் ரியூனியனில் (La Réunion) தோன்றியது, 2023ல் 3 மரணங்கள் ஏற்பட்டன.

பின்னர் மாநில பிரான்ஸிலும் பரவத் தொடங்கியது.

இது பொதுவாக கிராக் புகைக்குழாய்களில் அல்லது தண்ணீர் புகைக்குழாய்களில் பயன்படுத்தப்படுகிறது.

1 கிராம் விலை: சுமார் €300

இதன் வர்த்தகம் தற்போது வரையறுக்கப்பட்ட மட்டத்தில் உள்ளது.

 

3. கத் (Khat Arbuste)

யேமன் மற்றும் எத்தியோப்பியாவில் இயற்கையாக வளரும் செடி.

இதன் இலைகள் கத்தினோன் (Cathinone) என்ற புரதச்சேர்மம் கொண்டவை.

உற்சாகம், பசியை மறைக்கும், களைப்பை குறைக்கும் பாவனையுடன் பயன்படுத்தப்படுகிறது.

2024ல் பிரான்ஸில் 403 கிலோகிராம் கத் பறிமுதல் செய்யப்பட்டது.

பிரான்ஸில் பாரம்பரிய போதை மருந்துகளுக்கு மேலாக, தற்போது கோகெயின் ரோஸ், B13, கத் போன்ற புதிய வகை போதை மருந்துகள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் பாதிப்பு மட்டுமல்ல, அதிக விலையும், சட்டவிரோத வர்த்தக முறையும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்