பருவகால வெப்பம்: அதிக வெப்பத்தில் துடிக்கும் வெப்பக் கொதிகலன் வீடுகள்

6 ஆவணி 2025 புதன் 12:01 | பார்வைகள் : 546
பிரான்சில் மீண்டும் கடும் வெப்ப அலை நிலவுவதால், பரிசில் உள்ள பல குடியிருப்புகள் வெப்பக் கொதிகலன்களாக மாறியுள்ளன. குறிப்பாக, அலுமினியக் கூரைகள் (toit en zinc) அமைந்த வீடுகளில் உள்ளே வெப்பம் மிகவும் அதிகரிக்கிறது.
பசில் என்ற வாலிபர், பாரிசில் கூரையின் கீழ் அமைந்த தனது வீட்டில் வாழ்கிறார். அவரின் கூரையில் வெப்பநிலை 65°C முதல் 72°C வரை பதிவாகியுள்ளது. வீட்டின் உள்ளே 30°C இருந்தும், விசிறி இயங்கினாலும், வெப்பத்தினை ஆறிவிட முடியவில்லை.
இத்தகைய கூரைகள் பாரம்பரியத்தால் யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் இருந்தாலும், இவை வெப்பத்தை உறிஞ்சும் தன்மையால் காலநிலை மாற்றம் எதிர்கொள்ளும் இந்நேரத்தில் ஆபத்தானவையாகின்றன
பரிஸ் மாநகரம் தற்போது இந்த வீடுகளை:
வெப்ப சுயதிறன் கூடிய வடிவில் சீரமைக்க
யன்னல்களிற்கு மூடும் அடைப்பான்கள் (volets) நிறுவ
கூரைகளை காப்பிடுவதற்கு
பிரதான நடவடிக்கைகள் எடுக்கிறது.
2025 ஆம் ஆண்டு ஜூனில் வெளியான ஒரு ஆய்வின்படி, பிரான்சில் உள்ள ஒவ்வொரு மூன்றில் ஒரு வீடு வெப்ப சுடுகுழாயாக உள்ளது.
பரிசின் சிங்க் கூரைகள் வெப்பத்தை அதிகமாக உறிஞ்சுவதால், சில வீடுகள் உள்ளே வாழ முடியாத அளவுக்கு சூடாகின்றன. நகரம் தற்போது இந்த வீடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025