Paristamil Navigation Paristamil advert login

50 மில்லியன் பயணிகளை சந்தித்த சாள்-து-கோல், ஓர்லி விமான நிலையங்கள்!!

50 மில்லியன் பயணிகளை சந்தித்த சாள்-து-கோல், ஓர்லி விமான நிலையங்கள்!!

6 ஆவணி 2025 புதன் 11:16 | பார்வைகள் : 429


2025 ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில் சாள்-து-கோல் மற்றும் ஓர்லி விமான நிலையங்களூடாக 50 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். கொவிட் காலத்துக்கு முந்தைய சாதனையை விமான நிலையங்கள் நெருங்கி வருகின்றன.

2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 15.4% சதவீதம் அதிகமாகும். பிரான்சில் உள்ள அனைத்து விமான நிலையங்களூடாகவும் இதுவரை 179.1 மில்லியன் பயணிகள் இதுவரை பயணித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் 5.1% சதவீதம் அதிகமாகும்.

கொவிட் காலத்துக்கு முற்பட்ட 2019 ஆம் ஆண்டில் முதல் அரையாண்டில் மட்டும் 52.3 மில்லியன் பயணிகள் பயணித்திருந்தனர். பின்னர் 2023 ஆம் ஆண்டில் 47.1 மில்லியனும், சென்ற 2024 ஆம் ஆண்டில் 49 மில்லியன் பயணிகளும் முதல் அரையாண்டில் பயணித்திருந்தனர்.

இந்த வருடத்தில் இதுவரை ஓர்லி விமான நிலையம் 5% சதவீத பயணிகளையும், சாள்-து-கோல் விமான நிலையம் 4.3% சதவீத பயணிகளையும் அதிகமாக சந்தித்துள்ளது.

பரிசின் சுற்றுல்லாத்துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகிறது. தங்குமிடங்கள், உணவகங்கள் கணிசமான வளர்ச்சியை கண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்